
(வ.சுரேஸ் கண்ணா )
சத்துருக்கொண்டானில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் இறை இரக்க திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா ஞாயிறு மாலை நிறைவுபெற்றது .பிற்பகல் 02.45 மணிக்கு இறை இரக்க செபமாலை ஆரம்பமாகி அதனை தொடர்ந்து பெருவிழா திருப்பலி ஆரம்பமானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆயருடன் மட்டக்களப்பு மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்பணி தேவதாசன், கல்முனை மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்பணி யேசுதாசன், சிறிய குருமட அதிபர் கிரைட்டன் அவுஸ்கோன் இமட்டு எஹெட் கரித்தாஸ் இயக்குனர் அலெக்ஸ் ரொபேர்ட், இறை இரக்க திருத்தல நிருவாகக் குரு செட்ரிக் இமற்றும் அருட் தந்தையர்கள் இணைந்து கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .
திருப்பலி நிறைவில் சகோதரி பவுஸ்தீனாவின் திருப்பண்டம் தாங்கிய பேழை திருத்தலத்தை சுற்றி பவனியாக கொண்டு வரப்பட்டு இநிறைவில் ஆயரினால் திருப்பண்ட ஆசீர் வழங்கப்பட்டு கொடியிறக்கி திருவிழா நிறைவு பெற்றது.இப்பெருவிழா இத்திருத்தலத்தின் இரண்டாவது பெருவிழா என்பதும் இப்பெருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் பெருமளவிலான இறை இரக்க அடியார்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும் .


























