படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமும், கையெழுத்து போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நாளை (28) இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிவராமின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவரது கொலைகள் தொடர்பிலும் தனி ஆணையம் அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
என மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே நாளைய போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.













