புளியந்தீவு மரியன்னை பேராலய உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலி


(வ.சுரேஸ் கண்ணா )
புளியந்தீவு மரியன்னை பேராலய உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலி மட்டு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30க்கு ஆரம்பமாகி நடைபெற்றது. ஆயருடன் பேராலய பங்கு தந்தை அன்னதாஸ் அடிகளாரும் இதுணை பங்கு தந்தை லொயிட் அடிகளாரும் இணைந்து கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .

புதிய பாஸ்கா மெழுகுதிரி அர்ச்சித்து ஆயரினால் ஒளியேற்றப்பட்டு ஒளி மற்றும் வார்த்தை வழிபாட்டுடன் புதிய நீர் ஆயரினால் ஆசீர்வதிக்கப்பட்டு ,திருமுழுக்கு அருட்சாதனமும் ஆயரினால் நிறைவேற்றப்பட்டது இவ்வுயிர்ப்பு பெருவிழா திருப்பலி நிறைவில் ஆயர் இறை மக்களுக்கு ஆசீர் வழங்கி உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்தார்.