
மட்டக்களப்பு மேற்கு வலைய அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னஞ்ச்சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் சு.தேவராஜன் தலைமையில் (26) இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட மாணவர்கள் இருபது பேருக்கு சின்னங்கள் சூட்டப்பட்டது. அத்துடன் இதன்போது வகுப்புக்கான தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.















