மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கு நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக எம்.எச்.எம்.தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய வைத்தியர் கலையரசி துரைராசசிங்கம், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













