ஆரையம்பதி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் புத்தாண்டு விளையாட்டு விழா


ஆரையம்பதி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி நடத்திய 2018 புத்தாண்டு விழாவானது இன்று(22) ஆரையம்பதி செல்வநகர் கிழக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இவ் விழையாட்டு விழாவில் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், கிராமியக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கிடுகு இழைத்தல், நீல முட்டி உடைத்தல், ஓட்டப்போட்டி, சாக்கோட்டம், தேசிக்காய் ஓட்டம், கயிறிழுத்தல், ஊசிநூல் கோருத்தல் எனப் பல விழையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் விழையாட்டுக்களில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

எமது பாரம்பரியத்தைப் பேனுவோம் சேமிப்புக்கு வழிவகுப்போம் எனும் தொனிப் பொருளில் சமுர்த்தி வங்கியானது ஒவ்வொரு வருடமும் தங்களது பிரதேச மட்டங்களில் இவ் சித்திரை விழையாட்டு விழாவினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.