போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் பனை அபிவிருத்தி கைத்தொழில் பயிற்சி நிலையம் திறப்பு

(படுவான் எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட பழுகாமம், பட்டாபுரம் ஆகிய இடங்களில் பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட முகாமையாளர் திரு.விஜியகுமார் அவர்களின் தலைமையில்; இரண்டு கைத்தொழில் நிலையங்கள் 29.03.2018 ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராமிய அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது பிரதேச செயலாளர் கருத்து தெரிவித்த போது  எமது பிரதேசத்தில் அனேகமான மூல வளங்கள் இருந்தும்; எங்களால் ஆற்றுமை ஆளுமைகள்    அவற்றை பயன்படுத்தாமல் வெளியில் செல்ல விடுகின்றோம். அந்த நிலமை மாறவேண்டும். அதற்கான ஒரு முயற்சியாகத்தான் இதனை பிரியோசனப்பட்டு எடுத்துக் கொண்டிருக்கின்றோம் .

பனை அபிவிருத்தி சபை பாரிய செயற்த்  திட்டத்திற்காக நிதி ஒதுக்கீட்டை செய்து கொண்டிருக்கின்றார்கள். போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பழுகாமம் பகுதிக்கும் பட்டாபுர பகுதிக்கும் இணைந்த வகையில் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது. மூன்று பயிற்சி கூடங்கள் வெல்லா வெளியைச் சேர்த்து ஆரம்பிப்பதற்கு இருக்கின்றது.

போரதீவு பழுகாமம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட பிரிவுகள் யாவும் மாதிரி கிராமமாக உருவாக்கப்பட்டு உங்களுக்கான இதர தொழில் முயற்சிகள் யாவும் சம்மந்தப்பட்ட தொழில் முயற்சிக் கருவிகள் யாவும் வழங்கப்பட இருக்கின்றது. உங்களுக்கான தொழில் முயற்சி சான்றிதழ்களும் வழங்கப்பட இருப்பதோடு நீங்கள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கண்டிப்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது இருக்கின்ற கல்வி மாற்றத்தின் அடிப்படையில் ஒரு சிலர்; மாத்திரம்தான் மேற்கொண்டு கல்வி கற்பதற்கும் அரச நிறுவனங்களில் மாதாந்த சம்பளத்தை பெறுவதற்காக முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஆனால் தவற விடப்படுகின்ற சிலரால் சமூகத்துக்கான பயன்பாடுகள் குறைக்கப்படுகின்றன. பங்களிப்புகள் இல்லாமல் போகின்றது.

நாங்கள் அந்த பங்களிப்பினை ஏதோ ஒரு வகையில் இளைஞர்களுக்குள் ஆற்றுமையை அடையாளப்படுத்தி ஏதோ ஒரு வகையில் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதை எதிரபார்க்கின்றோம். எந்த ஒரு வகையிலும் படித்து விட்டு வேலை அற்றவர்களாக வீட்டுக்கு சுமையாக அல்லது வேலை வாய்ப்பை தவறுகின்ற நிலையில் இருக்கக் கூடாது என்பதனை தெளிவாகவும் அழுத்தமாகவும் தனது உரையில் கூறிக்கொண்டார்..