விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் அவருடன் இணையத் தயார்...- சுரேஷ் பிரேமசந்திரன்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப் அறிவித்துள்ளது.

அதன் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் செய்தி சேவை ஒன்றிற்கு பதிலழிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.