மட்டக்களப்பில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை இன்று (27) கைது செய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கடத்தலுக்காக பயன்படுத்திய டிப்பர் ரக வாகனத்தையும் மீட்டுள்ளதாக,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.