வெல்லாவெளி போரதீவூப்பற்று சமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சி


(படுவான் எஸ்.நவா)
போரதீவூப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சமுர்த்தி வங்கி வளாகத்தில் சமுர்த்தி “சௌபாக்கியா” சந்தைப்படுத்தல் கண்காட்சி (11) போரதீவூப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது சமுர்த்தி வாழ்வாதார திட்டத்தினால் 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட வாழ்வாதார உபகரணங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட  பொருட்களை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலாளரின் உரையின்போது உள்ளுர் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு வர்த்தகர்கள் தங்களது உற்பத்தி கொருட்களை சந்தைப்படுத்துவது மட்டுமல்லாமல் “சௌபாக்கியா”; கண்காட்சியிலும் ஏனைய இடங்களிலும் விற்பனை செய்து வருவதையிட்டு; மிகவும் சந்தோசம் அடைவதோடும் எதிர்வருகின்ற புத்தாண்டுடினை முன்னிட்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

இந் நிகழ்வின் போது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பீ.குணரெட்ணம் பிரதேச செயலகத்தின்  உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர், எஸ்.சசிகுமார் மட்டக்களப்பு மாவட்ட வங்கி மகாசங்க நடவடிக்கை முகாமையாளர், கே.சிவபாதசேகரம் மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் தலைமையக முகாமையாளர் திருமதி பீ.ஜீவகுமார் வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.