
(படுவான் எஸ்.நவா)
பாரம்பரியத்தை பேனுவோம் சேமிப்புக்கு வழிவகுப்போம்
சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு (22) போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட மூன்று சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளில் 'பாரம்பரியத்தை பேனுவோம் சேமிப்புக்கு வழிவகுப்போம்' என பாரம்பரிய விளையாட்டுக்கள் நடை பெற்றது.
இதன்போது பாரம்பரிய விளையாட்டுக்களான சிறுவர்களுக்கான மிட்டாய் சாப்பிடுதல், பனிஸ் சாப்பிடுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், தலையணை சமர் போன்ற பலவிளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தது.
இன் நிகழ்வுக்கு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பீ.குணரெட்னம் முகாமைத்துவப்பணிப்பாளர் கே.உதயகுமார் திருமதி பீ.ஜீவகுமார் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.A.A.N டயஸ் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்து ஆனைகட்டியவெளி கிராம பொதுமக்களினால் பிரதேச செயலாளர் அவர்களுக்கு சிறந்த சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டும் 2017ம்ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில முதல் நிலை உள்ள அக்கிராமத்தை சேர்ந்த மாணவன் திருச்செல்வம்-கேதீஸ் என்பவரையும்; பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.
































