அம்பாறை, காரைதீவு விபுலானந்தர் சதுக்கத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலய திறப்பு விழா நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பது சிறிய கட்சியல்ல இது பெரிய கட்சி அதனால் தான் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகளவான உறுப்பினர்களை பெற்றுள்ளோம். மேலும் எமது கட்சியானது மற்றவர்கள் நினைப்பது போன்று உடையும் கட்சியல்ல.
அத்துடன் கட்சியில் சிறிய தொகையினரே அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்களே தவிர கட்சியை விட்டு விலகவில்லை. அவர்கள் இன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனே இருக்கின்றார்கள். இதனால் எமது கட்சியானது சரியான பாதையில் செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து செயற்படுகின்றோம்.
ஆகையால் அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர் என்றவகையில் நான் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றேன். இதனால் நீங்கள் அனைவரும் எதிர்வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் என்னுடன் இணைந்து சேவையாற்ற முன்வரவேண்டும்.
30வருடகாலமாக நடைபெற்ற யுத்தசூழல் காரணமாக இந்தப் பிரதேசத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. அதனை தீர்ப்பதற்கும் நான் பாடுபடுவேன்” எனவும் அவர் தெரிவித்தார்.













