
காலை 09.00 மணியளவில் மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைக்கான அமர்வு ஆரம்பமாகியது. இதில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செ.புஸ்பலிங்கம் அவர்கள் 08 வாக்குகளைப் பெற்று எதிர்;த்துப் போட்டியிட்ட பி.தேவநேசராசா அவர்களை விட ஒரு வாக்கு மேலதிகமாகப் பெற்று தவிசாளராகத் தெரி செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது ஒருவர் நடுநிலை வகித்தார் உபதவிசாளர் தொரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொ.கோபாலப்பிள்ளை அவர்கள் 09 வாக்குகளைப் பெற்று பா.கந்தப்போடி அவர்களை விட 04 வாக்குகள் அதிகமாகப் பெற்று உபதவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது மூவர் நடுநிலை வகித்தனர்.


















