சுமார் மூன்று வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வு


சுமார் மூன்று வருடங்களின் பின்னர் இடம்பெறும் ஏறாவூர் நகரசபையின் முதலாவது மாதாந்த அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஏறாவூர் நகர சபையின் இறுதியமர்வு கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்றிருந்தபோது, நகர சபைத் தலைவராக அலிஸாஹிர் மௌலானா பதவி வகித்திருந்தார்.

ஏறாவூர் நகர சபை நிருவாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு  இடம்பெற்ற பின்னர் நிகழவிருக்கும் முதலாவது மாதாந்த அமர்வு இதுவாகும்.

ஏறாவூர் நகர சபையில், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 3 ஆசனங்கள், இலங்கை தமிழரசுக் கட்சி 2 ஆசனங்கள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 1 ஆசனம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1 ஆசனம் மற்றும் சுயேட்சை குழு 1 ஆசனம் என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளன.

புதிய தேர்தல் முறைமையின்படி கூடுதல் வாக்குகளைப் பெறாத பின்தங்கிய சிறிய கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஆசனங்கள் கிடைத்துள்ளன.