வரவேற்பும் பாராட்டும்


மட்டக்களப்பில் நாவலடி, புதுமுகத்துவாரம், கல்லடி, வேலூர், உப்போடை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் பிரதேச மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபையின் 7 வது முதல்வராகத் தெரிவாகிய கௌரவ தியாகராஜா சரவணபவன் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கல்லடி துளசி மண்டபத்தில் 28.04.2018 சனிக்கிழமை பி.ப 4 மணிக்கு  நடைபெறவிருக்கும்  இவ் வரவேற்பும் பாராட்டும் நிகழ்வில் கௌரவ முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.