பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரில் வாழும் இலங்கையர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
புத்திஜீவிகள் ,வர்த்தகர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதிக்கு இவர்கள் அமோக வரவேற்பளித்தனர்.













