இன்று மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பால் மட்டக்களப்பு வைத்தியசாலை நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்

கிழக்கு மாகாண அரச மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனை நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மருத்துவர்கள் இன்று காலை முதல் சேவைப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வேதன அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.