
[NR , Sajith]
சுமார் 08 ஆண்டுகளுக்கு பிறகு மண்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக மீள் புனரமைப்பு கூட்டமானது 2018.04.22ம் திகதி மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவை மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. ஆ. ஹமீர் அவர்களும் மாவட்ட இளைஞர் உத்தியோகஸ்தரான திருமதி. கலாராணி யேசுதாசன் மற்றும் திருமதி. நிஷாந்தி அருள்மொழி மற்றும் 14 பிரதேச பிரிவு இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்களும் மற்றும் 14 பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்வருடத்திற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்ற வேலையில் தலைவருக்கான தெரிவின் போது மண்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த செல்வன் பயஸ்ராஜ் என்பவரும் மண்முனைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த செல்வன் திவியநாதனுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் 29க்கு 23 எனும் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்று சுமார் 08 ஆண்டுகளுக்கு பிறகு மண்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த மூன்றாவது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் ஜெ. பயஸ்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.





















