இலங்கையிலும், சர்தேச ரீதியிலும் மெய்ப்பணம் (Virtual Currencies) தொடர்பான ஆர்வம் அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது:
டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வகையில் வெளியிடப்படும் பெறுமதியுடன் கூடிய அலகுகளுக்கு மெய்ப்பணம் என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கு பிரத்தியேகமான கணக்கு அலகொன்றும் காணப்படுகின்றது. எனினும், இந்த மெய்ப்பணம் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் பணம் அல்ல. இலங்கை மத்திய வங்கி எந்தவொரு நிறுவனத்திற்கும் இலத்திரனியல் பணம் உள்ளிட்ட மெய்ப்பணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கவில்லை.

அதேபோல், எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆரம்ப நாணயங்களை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மெய்ப்பணத்தின் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்கும், அதற்கான கணக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மத்திய வங்கி போன்ற ஒரு கேந்திர நிறுவனம் இல்லாததனால், இவற்றை பயன்படுத்துபவர்கள் மத்தியிலோ, கொடுக்கல் வாங்கல் சார்ந்த பிரச்சினைகளின் போதோ தலையிடக்கூடிய பொறுப்புமிக்க ஒரு தரப்பு இல்லை. பிட்கொயின்(Bitcoin), லைட்கொயின்(Litecoin) , எத்திவியம் (Ethereum) போன்ற இலத்திரனியல் பணத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.