வயல்வெளியில் வேலை செய்த 20வயது இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழப்பு!


தம்பலகாமம் பகுதியில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த என்.எம்.முனீஸ் எனும் 20 வயது இளைஞரே நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.