இலங்கை வெளிநாட்டு சேவைக்காக போட்டி பரீட்சையில் தெரிவான 21 பேர் கடமையேற்பு


இலங்கை வெளிநாட்டு சேவைக்காக சேர்க்கப்பட்ட புதிய அதிகாரிகள் 21 பேரும் நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக இடம்பெற்ற போட்டி பரீட்சையில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களை சேவையில் இணைத்து கொள்ள முன்னர் விரிவான பயிற்சியில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.