கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத காலமாக மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படாத அவல நிலை..!


கிழக்கு மாகாணத்தில் 56 ஆயிரத்து 152 சிறுவர்களுடன் இயங்கும் ஆயிரத்து 834 முன்பள்ளிகளில் கடமையாற்றும் 3357ஆசிரியர்களுக்கு இவ்வருடத்திலிருந்து கடந்த 4 மாத காலமாக மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த 3000 ருபா கொடுப்பனவு இவ்வருடம் இதுவரை வழங்கப்படாமையினால் அவர்கள் பரிதாபநிலைக்குள்ளாகியிருக்கின்றனர்.

இன்றைய வாழ்க்கைச்செலவுக்கு இது போதாது என்பதற்கு அப்பால் அது கூட இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது என ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
கிழக்கு மாகாணசபையினால் கடந்த வருடம் வழங்கப்பட்டு வந்த இக்கொடுப்பனவு 3000 ருபா தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை வடக்கு மாகாணசபை 6000 ருபாவை மாதாந்தம் தொடர்ந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்த மாதாந்த கொடுப்பனவை இம்மாதத்திலிருந்தாவது வழங்க மாகாண பிரதம செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இக்கொடுப்பனவு 10ஆயிரம் ருபா வரையிலாவது அதிகரிக்கப்படவேண்டும் என்று சங்கம் கேட்டுள்ளது.