மட்டக்களப்பு - காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல் - வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை 30.04.2018 இரவு 11:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.விபத்தில் சிக்கியவர்களில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இவ்விபத்துப் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் வாகனத்துடன் மோதுண்டு பஸ் சேதடைந்துள்ள போதும் பஸ்சும் எரிபொருள் ஏற்றிவந்த பவுஸரும் தீப்பிடிக்காமல் போனது ஸ்தலத்திற்கு உதவிக்கு விரைந்த பொலிஸார்இ பொதுமக்கள் மற்றும் பயணிகள்; அனைவராலும் ஆச்சரியமாக நோக்கப்படுகிறது















