நேர்முகப் பரீட்சையில் அநீதி! கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்ற

தங்களது பெயர்கள் வௌியிடப்படவில்லையென தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தவகையில் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி இன்று (14-05-2018) கிழக்கு மாகாண ஆளுநர்

அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் யுத்த காலத்தின் போது எவ்வித கொடுப்பனவுமின்றி பாடசாலைகளில் தொடர்ச்சியாக கற்பித்து வந்ததாகவும்இ தாங்கள்

பல தடவைகள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.