இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்ப மாற்றத்தின் பல்பரிமாண வளர்ச்சியினாலும், மாற்றமுறும் காலத்தின் தேவையினையும், சமூகத்தின் எதிர்பாப்புக்களையும், ஒவ்வொரு பெற்றோரினதும் நம்பிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் எதிர்காலத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் வகையில் அரசியல் செயற்பாடுகளினுடாக அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அரசாங்கத்தினது செயற்பாடுகள் மூலமாகவும் காலத்தின் நவீன மாற்றத்திற்கான தேவை அடிப்படையில் இன்று பாடசாலைகள் அரசியல் மயமாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
கொத்தணி பாடசாலை முறைமையை அடுத்து கிராமப்புற, நகர்ப்புற பாடசாலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையில் மொத்தமான கணிப்பீட்டின் படி 10,100 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 24 இலட்சத்திற்க்கும் அதிகமான மாணவர்களையும், 2½இலட்சம் ஆசிரியர்களையும் கொண்டு அமைவதுடன் மாகாணக்கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் தரம், வகை என்பவற்றிற்கமைய 1AB, 1C, Type II, Type III மற்றும் தரமுயர்த்தப்படும் வேளை தேசிய பாடசாலைகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையில் எதிர்பார்க்கப்படும் நற்பிரஜைகளை சமூகத்தில் உருவாக்கும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி வாயிலாக தொடர்ந்து செல்கின்றமையை காணலாம். தொடர்கற்றல் என்பது தொடர்கரும செயற்பாடு அடிப்படையில் இடம்பெறுவதுடன், ஆசிரியர்களது கற்பித்தல் செயற்பாடுகளும் மாணவர்களது கற்றல் செயற்பாட்டின் வாயிலாக பெறும் சிறந்த பெறுபேறுகள் பாடசாலையை முன்னேற்றவும், அபிவிருத்தியைத்தாண்டவும் செய்கின்றது. வகுப்பில் 40 நிமிட பாடவேளையில் அடையப்படும் விசேடகுறிக்கோள்களின் வாயிலாக பாடசாலையின் குறிக்கோள்களும் அடையப்பட்டு தேசிய இலக்குகள் நாடளாவியரீதியில் அடையப்பட்டு கொண்டு இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றங்களும் புதிய சீர்திருத்ததுடனான கல்வி முயற்சியுடனான விளைவுகளின் வாயிலாக பாடசாலைகள் இன்று அரசியல் மயமாகிக் கொண்டிருக்கின்றன.
பாடசாலையானது தம்மை சமூகத்தில் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சமூகத்தின் எதிர்பார்ப்ர்பினையும், பெற்றோரின் நம்பிக்கையினையும் நிறைவேற்றும் வகையில் அரசியற் காரணிகளை உட்கொண்டு பாடசாலைகளில் இடம்பெறும் தரம் மற்றும் பண்பு ரீதியான செயன்முறையே பாடசாலையின்; அரசியல் மயமாக்கம் எனப்படும் இச்செயற்பாட்டின் வாயிலாகவே பல்வேறு வகையிலான அபிவிருத்தி செயன் முறைகளும், முன்னேற்றத்துடனான நவீன உலகிற்கு தயார்படுத்தும் வேலைத்திட்டங்களும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்று பாடசாலைகள் அரசியல் மயமாவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக பல்வேறு கோணங்களில் பல வகையான செயன்முறை மற்றும் தர்க்க ரீதியான விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தவகையில் பாடசாலையின் பௌதீக, மானிடவளக்கட்டமைப்பு, பாடசாலையின் வள அசமத்துவம,; ஊரினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள், அரசியற்கட்சிகளின் தாக்கம், பாடசாலையின் முன்னேற்றவாதிகளையும்,கண்காணிப்பாளர்களையும் கொண்டிருப்பதுடன் அரசியல் தாக்கத்தினாலும் கவரப்பட்டு இருத்தல், ஊர் அரசியல் மயமாக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு அமைந்திருத்தல், அரசியல் விழுமியக்குழுக்கள் மற்றும் ஆளணியினர் தலைமைதாங்கும் செயற்பாடுகள் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
பாடசாலையில் அரசியல் மயமாக்க செயற்பாடு காரணமாக பல்வேறு வகையான அபிவிருத்தி சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பாடசாலையின் பெறுபேற்றில் அதிகரிப்பு, வினைதிறன் மற்றும் வினைதிறன் கொண்ட ஆளணியினரின் உருவாக்கம், மாறிவரும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம்மை தக்க வைத்துக் கொள்ளும் ;தன்மை, வளப்பகிர்வு மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டின் ஊடாக ஆளணியினரின் உருவாக்கம், சிறந்த சமூகப் பிரிவினரிடையான தொடர்பாடல,; புதிய கல்விக்கொள்கை மாற்றங்களை உள்வாங்கல் தொழிநுட்பமயமாகும். உலகிற்கான இஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்தல், மக்களது அரசியல் பொருளாதார சமூக எழுச்சி கிராமப்புற அபிவிருத்தி, வெளிக்கள மாணவர்களின் வருகை அதிகரித்தல், வெளிநாட்டவர்களின் உதவி அதிகரித்தல,; நிறுவனங்களின் நிதி உதவியும், ஒத்துழைப்பும் கிடைத்தல் முதலான பல்வேறுபட்ட நன்மைகள் இன்றைய பாடசாலைகளில் அதிகரித்தவண்ணம் உள்ளமையைக் காணலாம்.
கிணற்றுத்தவளை போல உள்ள கிராமப்புற பாடசாலைகள் இன்று நகரமயமாகிக் கொண்டு உள்ளதுடன் வினைத்திறன் மற்றும் விளைதிறன் செயற்பாட்டினூடாக அரசியல் அரங்கிற்கு மாற்றம் பெறுவதினைக் காணலாம். உதாரணமாக அண்மைக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 1,000 பாடசாலைகளின் உருவாக்கம் காரணமாக உயர்தரப்பிரிவில் தொழிநுட்பவியல் பாட அறிமுகம் , தொழிநுட்ப கட்டிடங்களின் வருகை, நவீன விஞ்ஞான ஆய்வுகூடங்களின் அதிகரித்த பாவனை, 'அருகிலுள்ள பாடசாலையை தரமுள்ள பாடசாலையாக்கும் திட்டம்' காரணமாக, செயற்பாடுகள் எதிர்காலத்தில் தொழில் வாய்பிளை அடிப்படையாக கொண்டு வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமையை புறந்தள்ளி எதிர்காலத்தில் உறுதியான கைத்தொழில் உலகிற்கு மாணவர்களை தயார்படுத்தும் முன்னேற்றகரமான செயற்பாட்டிற்கு வித்திடும் காரணியாக அரசியல் மயமாக்கப்பட்ட பாடசாலைகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.
'ஒரு நாணயத்திற்கு இருபக்கம் போல' இன்றைய நிலையில் அரசியல் மயமாக்கப்பட்ட பாடசாலைகளில் எதிர்பாராத நிகழ்வும் முன்னேற்றத்தை சீர்குலைக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. குறித்த அரசியல்வாதியினால் தலைமை தாங்கும் பாடசாலைகளாக மாறுதல், பாடசாலையில் குறித்த கட்சி பற்றிய பிரச்சாரம், மாணவர்களை அரசியல் களத்திற்கு குதிக்கச் செய்யும் மறைமுக பின்னூட்டல்கள், பாடசாலையின் வளங்களை தாக்கப்படுதல், ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான உயிர் அச்சுறுத்தலுடன் கூடிய மிரட்டல்கள், தாக்குதல்கள், அதிபர் மற்றும் ஆளுமை உள்ள ஆசிரியர்களை இடமாற்றல், குறைநிரப்பல் செய்யும் போது ஏனைய பாடசாலைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை, ஆளணியினருக்கு அதிகமான ஆசிரியர்களை கொண்டிருப்பதன் காரணமாக பின்தங்கிய பாடசாலைகள் புறந்தள்ளப்படல், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கின் காரணமாக 8 வருடங்களுக்கு அதிகமாக நீடித்திருத்தல், ஊடங்களில் தவறான புறக்கணிப்பு, பாடசாலை பற்றிய அவமதிப்பு, அரசாங்க உதவி மறுக்கப்பட்டிருத்தல,; பாடசாலை நிர்வாகமானது பிறரை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்படல், பாடசாலை கௌரவம் பாதிக்கப்படல் முதலான பல்வேறுபட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் பெரும்பாலும் நகர்ப்புற பாடசாலைகளை விட உள்ளுர்ப் பாடசாலைகளில் அதிகம் இடம்பெற்று வருகின்றன.
' மாற்றம் ஒன்றே நிரந்தரமானது' என்ற கருத்திற்கிணங்க நாட்டின் அபிவிருத்தியை முன்னேற்றும் வகையிலான அனைத்து செயற்பாடுகளின் மூலமாக பாடசாலைகளில் இடம்பெறும் அரசியல்மயமாக்கம் உட்பட அனைத்துவிதமான செயற்பாடுகளின் மூலமாக பாடசாலைகளில் உட்கட்டமைப்பு மற்றும் வளப்பகிர்வு சார்ந்து இடம்பெற வேண்டியது அவசியமாகும். நாட்டில் கைத்தொழில் மற்றும் தொழில்வாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறந்த ஆளுமை கொண்ட மாணவர் சமுதாயத்திற்கு வித்திடும் வகையில் நாட்டின் கல்விச்செயற்பாடுகள் அமைய வேண்டியது அவசியமாகும்.
அதனடிப்படையில் காலத்தின் தேவைக்கும், பெற்றோர் மற்றும் சமூகத்தவரினது எதிர்பார்ப்ர்புக்களையும், நம்பிக்கைளையும் நிறைவேற்றும் வகையிலான ஒட்டு மொத்த செயற்ப்பாடுகள் அனைத்துக்கும் பாடசாலை அரசியல் மயமாக்கப்பட வேண்டியது காலத்தினதும் தொழிநுட்ப மயமாகும் உலகிற்கு முகங்கொடுக்கும் வகையில் கட்டாய தேவையாக அமைவதுடன் கைத்தொழில் மயமாகும் உலகிற்கு சிறந்த ஆளுமை கொண்ட மாணவர்களை சமூகத்தில் உருவாக்கும் வகையிலும் , 1948ம் ஆண்டுக்கு பிற்பட்ட தேசிய கலவிக் கொள்கையின் படி சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கும் வகையிலாக விசேடகுறிக்கோளினை அடைவதன் வாயிலாக நாட்டின் கல்வியி;ன் தேசிய இலக்கினை நிறைவேற்றுவதிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் அரசியல்மயமாகும் பாடசாலையின் செல்வாக்கினை இனங்கான முடிகிறது.

க.அபிலாஷ்
கல்வியியல் சிறப்புக்கற்கை
விடுகை வருடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்













