குருக்கள்மடத்தில் நடந்தேறிய 'சயிந்தவன் வதை' வடமோடிக் கூத்து சதங்கை அணிவிழா


குருக்கள்மடம், கிராமத்தில் சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து சதங்கை அணி விழா நிகழ்வு 12.05.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வு கிராம மக்கள், பங்கேற்ற கூத்தர்கள், கூத்தரின் உறவினர், பழய கூத்தர்கள், அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் என்போரின் ஈடுபாட்டுடன் மிகுந்த சந்தோசத்திற்குரியதொரு குதுகல நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வை பாரம்பரிய முறைப்படி இக்கூத்தின் அண்ணாவியார் திரு வே. தம்பிமுத்து நடாத்தினார்.

கலாநிதி வடிவேல் இன்பமோகன் அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனைப்படியும் இடம்பெறும் கூத்துச் செயற்பாட்டின் ஒரு பகுதியான இச்சதங்கை அணி விழாவினை ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய தலைவர் திரு வீ.மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய நிர்வாக சபையினரே இக்கூத்தின் ஏற்பாட்டாளர்களாகும். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாநிதி சி.ஜெயசங்கர், பணிப்பாளர் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவனம், கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கான சிறப்பு அதிதிகளாகதிரு.சு.சந்திரகுமார், தலைவர், நுண்கலைத்துறை, புலவர் கி.அருலம்பலம், பருத்திச்சேனை, கன்னன்குடா, திரு.ஆ.சிவசம்பு, அதிபர், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குருக்கள்மடம் கிராமம் திறமையான பல கூத்தர்கள் வாழ்ந்த பல கூத்துக்களை ஆடி அரங்கேற்றி பெயர் பெற்றதொரு கிராமமாகும். இராம நாடகம்,கீசகன் வதை,வள்ளி திருமணம், மணிமாலை சரித்திரம், குருக்கேத்திரன் போர் என்பன போன்ற கூத்துக்களை ஆடி அரங்கேற்றியதுடன்

மட்டக்களப்பின் பல பாகங்களிலும் களரியேற்றம் செய்யப்பட்டுது கூத்துச் செயற்பாட்டில் சிறந்து விளங்கிய கிராமாக அமைந்திருந்தது. இக்கிராமமத்தில் கூத்துச் செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெறாது இருந்தது.

இருந்தும் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் முயற்சியால் சென்ற ஆண்டு குருக்கெத்திரன் போர் வடமோடிக் கூத்தின் மூலம் கூத்துச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இது அவரினால் மேற்கொள்ளப்படும் இரண்டாவது கூத்துச் செயற்பாடாகும்.
இக்கூத்து செயற்பாட்டில் மட்டக்களப்பில் சமகாலத்தில் கூத்து வீரியமாகப் பயிலப்படும்

கிராமங்களில் உள்ள பல கூத்துக்கலைஞர்களும் இக் கூத்து முயற்சி சிறப்பாக அமைவதற்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஒத்துளைப்புக்களை வழங்கி வருது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய கலைகள் மக்கள் சமூக பண்பாட்டு, விழுமியங்களுடன் பிணைந்திருப்பதால் அதற்கு பொருத்தமான சூழல் கிடைக்கும்போது அதன் உயிர்மையை வீரியமாக்கிக்கொள்ளும் என்பதையும்

அதில் பல கலைஞர்களும் இணைந்துகொள்வார்கள் என்பதை குருக்கள்மடம் கூத்துசெயற்பாடு படிப்பினையாக உணர்த்தி நிற்கின்றது.
இக்கூத்தில் பங்கேற்ற கலைஞர்கள், அண்ணாவியார் திரு.வே.தமிபிமுத்து, உதவி அண்ணாவியார்  திரு.சீ.அலெக்ஸ்சாண்டர், கொப்பியாசிரியர் : திரு.இ.முத்துலிங்கம்,

வி.கோடீஸ்வரன், சபையோர் திரு.வ.மகாலிங்கம், திரு.கு.பிரபாகரன், கட்டியங்காரன் செல்வன் ச.சோபிதன், சயிந்தவன் திரு.செ.சுகிலன், தருமர் திரு.க.சஜிதன், வீமன் திரு.யோ.றோகிலன், அருச்சுனன் திரு.த.ரவி, கிருஷ்ணர் திரு.வே.லோகுசன்,சுபத்திரை : திரு.ப.சந்திரசிவம்,துரோணர் திரு.அ.ரேனுஜன்,

துரியோதனன் திரு.யோ.குருஷேத்திரன்,சகுனி : திரு.கு.அபிநயன்,கன்னன் திரு.ர.பிலோஜன், விகர்ணன்  திரு.சா.இரவீந்திரராஜா,துச்சடை செல்வன்.ஜெ.பிரவீன்;,திரௌபதை செல்வன்.து.யதுஸ்கரன்,தோழி செல்வன்.ப.அபிவர்மன்,தோழி செல்வன் ந.சோபிதன்.