
மட்டக்களப்பு சீயோன் தேவசபையின் ஓய்வு நாள் பாடசாலையினால் நடாத்தப்படும் வேதாகம கண்காட்சி இன்றும் நாளையும் நடைப்பெற்றுக்கொண்டு வருகின்றது.
இன்றைய நாள் ஆரம்ப வைபவம் மட்டக்களப்பு சீயோன் தேவசபையின் தலைமைப் போதகர் றொஷான் மகேஷன் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இவ் ஆரம்ப வைபவத்தில் முன்னாள் கல்வித் திணைக்கள பணிப்பாளர் திரு. டேவிட் கணபதிப்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும்,
கிழக்கிலங்கை சுவிஷேச பணியின் தலைமைப் போதகர் குகன் ராஜதுரை அவர்கள் விசேட விருந்தினராகவும், மட்டக்களப்பு நாட்சதுர சுவிஷேச சபையின் தலைமைப் போதகர் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், மற்றும் இடங்கள் கையாக்கங்களாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறார்களின் கைவண்ணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வேதாகம கண்காட்சியின் முதல் நாளான இன்று பாடசலை மாணவர்களும் பொது மக்களும் கண்டுகளித்தனர். இரண்டு நாட்கள் நடைப்பெற்றும் இவ் கண்காட்சி அனைவரின் பார்வைக்கு இலவசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.























