
(J.ஜிது)
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடத்தும் கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழக மைதானத்தில் வெள்ளிக் கிழமை(11) பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் அவர்கள்களும் .உதவி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.நவேஸ்வரன் அவர்களும்
சிறப்பு அதிதிகளாக மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், சுகாதார வைத்திய அதிகாரி DR . K.ரமேஸ், கௌரவ அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் அவர்கள் கலந்துகொண்டதுடன்,
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமியக் கழகங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இவ் விழாவில் தமிழர் கலாசாரம் பரிணமிக்கும் பல விளையாட்டுக்கள் நடத்தபட்டதுடன் வெற்றி ஈட்டியவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. பிதேச மட்ட விளையாட்டுப் போட்டியில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று தாழங்குடா மண்முனை ஸீப்ரா விளையாட்டுக் கழகம் முதலிடத்தினை தன்வசமாக்கியது.


















































