இதன் மூலம் இலங்கையில் சமாதானம், நீதி என்பன மேம்படுத்தப்படும் என்பதுடன், சர்வதேச மற்றும் உள்நாட்டு சமூகம் என்பன பொறுப்புக் கூறல் மற்றும் நிலைமாறுகால நீதி என்பனவற்றை மேம்படுத்த முடியும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிப்படைந்தவர்களின் வடுக்கள் முற்றாக நீங்கி, சகல சுபீட்சங்களுடன் இலங்கை மக்கள் வாழ வேண்டும்.
கடந்த ஒன்பது வருட காலப்பகுதியினுள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தில் பாதிப்படைந்த தமிழ் மக்களை சந்தித்துள்ளதாகவும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பம் துயரம் குறித்து தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் தீர்க்கமான பொறுப்புக் கூறலை செயற்படுத்தி மக்களுக்கு சிறந்த வாழ்வியலை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.













