மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக தேசிய கட்சியொன்றின் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபைக்குட்பட்ட மாவடிவேம்பு விளையாட்டு மைதானத்தில் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் மட்டக்களப்புக்கு வருகை தந்தனர்.
எதிர்வரும் 7ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதின நிகழ்வு தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட கட்சி அமைப்பாளர்கள், ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இம்முறை மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தமிழ் பேசும் மக்கள் அமோக ஆதரவளித்தன் காரணமாகவே இம்முறை மட்டக்களப்பில் மே தின நிகழ்வினை நடத்த ஜனாதிபதி தீர்மானித்ததாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மட்டக்ளப்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்து 25000 பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4















