மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மே தின நிகழ்வு


மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அலுவலகத்தில் கட்சியின் பிரதித்தலைவர் இரா.துரைரெட்ணம் அவர்களின் தலமையில் திங்கட்கிழமை(7) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  மேதின நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது முன்னாள் மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார்.பிரசன்னா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் அமைப்புக்களின் தலைவர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின்போது கலந்துகொண்ட கால்நடை பண்ணையாளர்கள் விவசாய அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களும் தங்களுடைய கோரிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன் இவற்றுக்கான தீர்வினை இலங்கை அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் என மேதின கூட்டத்தின் போது எடுத்துரைக்கப்பட்டது.