சிறிய அளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளம் முயற்சியாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கென துருனு திரிய எனும் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று 35 வயது அல்லது அதற்கு குறைந்தவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பிட்ட கடன் திட்டத்தினை பெற்றுக் கொள்ள ஆர்வம் உள்ள இளம் தொழில் முயற்சியாளர்கள் கிராம உத்தியோகத்தர்களிடமோ அல்லது அருகில் உள்ள இலங்கை வங்கி கிளையில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட கடன் திட்டத்தினை பெற்றுக் கொள்ள ஆர்வம் உள்ள இளம் தொழில் முயற்சியாளர்கள் கிராம உத்தியோகத்தர்களிடமோ அல்லது அருகில் உள்ள இலங்கை வங்கி கிளையில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.













