விவசாய அமைச்சில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கிய நபர் கைது

விவசாயத்துறை அமைச்சில் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக தெரிவித்து அந்த அமைச்சின் செயலாளர் என அடையாளப்படுத்திக் கொண்டு பல பேரிடம் பணத்தினை பெற்றுக் கொண்டுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 பேரின் முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி ஒருவரிடம் 35 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையிலான பணத் தொகையினை பெற்றுக் கொண்டுள்ளதாக அறியவந்துள்ளது.