சமுர்த்தியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரும் அரசாங்கத் திட்டத்திற்கு சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சி அதிகாரிகள் எதிர்ப்பு


சமுர்தி வங்கியை, மத்தியவங்கியின் கீழ் கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு, அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சி அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த யோசனை இரண்டு வாரங்களுக்குள் மீளப்பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு இந்த யோசனைமீளப்பெறப்படாத பட்சத்தில், அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று, அந்த அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர், ஜகத் குமார தெரிவித்துள்ளார்.