அரசாங்க வைத்தியர்களுக்கு இவ்வாண்டிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகள், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தகுதியுடைய வைத்திய நிர்வாகி நியமிக்கப்படல் மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் தொடர்பான பிரச்சினை போன்ற விடயங்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமானது கடந்த மாதம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடனான சந்திப்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாமல் இருந்தமையால், இச்சங்கம் மாகாணம் தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













