கரடியனாறு பிரதேசத்தில் மிருக வேட்டைக்கு சென்றவரின் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு!


மட்டக்களப்பு, கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டையாடச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவரே உயிரிழந்துள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷணன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சட்டவிரோதமான உள்ளூர் துப்பாக்கியுடன் நேற்று இரவு மிருக வேட்டைக்கு சென்றபோது அவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவரின் துடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை செங்கலடி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும்போது வழியிலேயே உயிரிழந்துள்ளதாகவும் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.