அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு


இவ்வாண்டுக்கான சிங்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்வு அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் மிகச் சிறப்பானமுறையில் கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஜித பிவனிகசிங்க, விசேட அதிதியாக அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் ஏ.சக்கி அத்தாவுல்லா, சிறப்பு அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்,ஏ.லத்தீப், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஏ. அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதன் போது கலாச்சார பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும்  உத்தியோகஸ்தர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன். நிகழ்வில் கலந்துகொண்ட  மாணவர்கள், அதிதிகள் அனைவருக்கும் பாரம்பரிய சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன.