தேசியநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலக பிரியாவிடை நிகழ்வு


(M.S.M. சறூக்) 
தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக (மனித வளம்) கடமையாற்றிய என்.எம்.நௌபிஸ் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம்  பெற்று செல்வதனால் அவருக்கான பிரியாவிடை வைபவம் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ அவர்களின் தலைமையில் அலுவலககேட்போர் கூடத்தில் இன்று (2018.05.03) மிகசிறப்பாக இடம் பெற்றது.

அதன் போது இடமாற்றம் பெற்றுச் செல்லும் என்.எம்.நௌபிஸ்; அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துசிறப்பித்திருந்தனர்.