
(பழுகாமம் நிருபர்)
கால்நடைகளுக்கு தேவையான புல்லை அரிந்து பெறுவதற்கான இயந்திரத்தை பழுகாமம் கேதீஸ் வெல்டிங் சொப் உரிமையாளர் மைக்கல் கேதீஸ்வரன் வடிவமைத்துள்ளார்.
இவர் மாட்டுப்பண்ணை ஒன்றை நடாத்தி வருகின்றார். இவ் இயந்திரத்தை பல இடங்களில் தேடி கிடைக்காமல் போனதாகவும், வேறு நாடுகளில் இருந்து பெற்றுத்தருவதாகவும் கூறியதால் தனது முயற்சியினால் இவ்வியந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
இதனை அவர் தனது பண்ணையில் தற்போது பயன்படுத்தி வருகின்றார். இது போன்று இன்னும் பல இயந்திரங்களை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















