மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழவெட்டுவான் மகா வித்தியாலய மாணவி சமூகவிஞ்ஞானப் போட்டியில் தரம் – 8வகுப்பில் தேசிய ரீதியில் முதலிடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
க.நிலாஜினி என்ற மாணவியே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவியின் வெற்றிக்கு வழிகாட்டி பயிற்றுவித்த ஆசிரியர் ந.நவநீதன் அதிபர் ம.கருணாகரன் ஆகியோர் பாராட்டப்பட்டுள்ளனர்.