(வி.ரவீந்திரமூர்த்தி)
கணிதமேதை கோணேசபிள்ளை கோணாமலை அவர்கள் இன்று (15.05.2018) அவர் பிறந்த மண்ணான மண்டூரில் இறைபதம் அடைந்ததை நினைவுகூர்ந்து இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.கலாநிதி கோணேசபிள்ளை மட்டக்களப்பில் உள்ள மண்டூரில் 1929.11.08 இல் பிறந்தவர். இவரது தந்தையார் கோணாமலை உபாத்தியாயர். இவர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையோடு யாழ்ப்பாணத்து புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உயாத்தியாயரிம் தமிழ் படித்தவர். 1912 ஆம் ஆண்டு மண்டூரில் சைவப் பாடசாலை அமைக்கப்பட்டபோது அதில் கோணாமலை ஆசிரியராகப் பணியாற்றினார். மண்டூர் பாலைமுனையில், அரசாங்க பாடசாலை கட்டுவதற்கு மக்கள் முயற்சி எடுத்தபோது கோணாமலை தனது காணியில் ஒரு ஏக்கரை இப்பாடசாலை அமைப்பதற்கு நன்கொடையாகக் கொடுத்தார். தாயார் தம்பிமுத்து விதானையின் மூத்த மகள் அழகம்மா ஆவார். புலவர்மணி பெரியதம்பிப்பிள்;;ளையின் தாயார் இத் தம்பிமுத்து விதானையாரின் சகோதரியாவார்.
கோணேசபிள்ளை மட்டக்களப்பு சித்தாண்டி ராமக்கிருஷ்ண வித்தியாலயம், சிவாநந்தா வித்தியாலயம், திருகோணமலை இந்துக்கல்லூரி ஆசியவற்றில் ஆசிரியராகவும் கண்டி முஸ்லிம் ஆசிரி;யர் கல்லூரி, அட்டாளைச்சேனை முஸ்லிம் ஆசிரியர் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி அதிபராகவும் பணியாற்றி பின்னர் கொழும்பு பல்கலைக் கழகம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், பொட்சுவானா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணியாற்றியவராவார்.
கொழும்புப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவில் உள்ள குயிஸ்லாந்து பல்கலைக்கழகம், மக்குவாறி பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள கொலம்பியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து கல்விமாணி (கணிதம்) முதலாம் வகுப்பு, முதுகலைமாணி, முது விஞ்ஞானமாணி, கல்வி கலாநிதி, தத்துவக் கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். கொழும்பு பல்கலைக் கழகம் நடத்திய கல்வி மாணி பரீட்சையில் இவர் மாத்திரமே முதலாம் வகுப்பில் அந்த ஆண்டில் சித்தியடைந்து சாதனை படைத்தவர். இந்தச் சாதனையை கௌரவிக்கும் நோக்காக மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்தது. மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியில் முதன் முதல் அதிபராகப் பணியாற்றிய கிழக்கு மாகாணத்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கலாநிதிப் பட்டத்துக்குப் படிக்கும்போது சிறந்த மாணவர் (American Award of Excellence) விருது பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் சர்வதேசக் கல்வியும் ஐக்கிய நாடுகள் சபையும் என்னும் கற்கை நெறியில் படித்து உச்ச பெறுபேற்றைப் (யூ) பெற்றவர்.
இவர் மண்டூர் இராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அப்பாடசாலையின் முகாமையாளராக இருந்த சுவாமி விபுலாநந்தரால் ஆசீர்வதிக்கப்பெற்றவர். மூன்றாம் வகுப்பு சித்தியடைந்தபின் சிவாநந்தா வித்தியாலயத்தில் படிப்பதற்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவரது தந்தையார் அவரை மண்டூர் பாலைமுனையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த அரசினர் பாடசாலையில் சேர்த்துவிட்டார். இந்த பாடசாலை இவரது தந்;தையார் நன்கொடையாகக் கொடுத்த காணியில் கட்டப்பட்டிருத்ததே இதற்குக் காரணம். இப் பாடசாலையில் படிக்கும்போது கிழக்கு மாகாணத்து மாணவர்களுக்காக நடத்தப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி; சித்தியடைந்து சிவாநந்தா வித்தியாலயத்தில் படிக்கச் சென்றார். இங்கு உயர்கணிதம், விசேட கணிதம், வர்த்தக கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சிரேஷ்ட தராதரப்பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து தொடர்ந்து படிக்க யாழ்ப்பாணம் சென்றார். ஹாட்டிக்கல்லூரியில் படிக்கும்போது தமிழ் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். பின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படிக்கும்பேது தமிழ் பேச்சுக்கு பதக்கம் பெற்றார். மகரகமை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் கணிதத்தில் விசேட பயிற்சி பெற்று தனது விஞ்ஞான கணித குருவான திரு அம்பலவாணரின் அழைப்பின் நிமித்தம் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். மகரகமை ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் கலாநிதி கா.பொ.இரத்தினம், கலாநிதி பொன்னையா ஆகியோரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அக்கல்லூரி தமிழ் சங்கத்தின் செயலாளரரகவும், விவாதக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
திருகோணமலை இந்துக் கல்லூரியில் பணியாற்றும்போது, வீரகேசரி, ஈழகேசரி, ரைம்ஸ், லங்காதீப ஆகிய பத்திரிகைகளின் நிருபராகவும் பணிபுரிந்தார். அப்போது புது டில்லியில் நடைபெற்ற ஆசிய எழுத்தாளர் மாநாட்டுக்கு கலாநிதி ;கா.பொ.இரத்தினத்தோடு சென்று பங்கு பற்றினார். ஆங்கு ராஜேந்திரபிரசாத், நேரு, ராஜாஜீ, ராதாக்கிரிஷ்ணன், முல்க்ராஜ் ஆனந், விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணன், ராமசாமி ஐயர் முதலியோரது உரைகளை நேரடியாகக் கேட்கும் வாய்பும் இவருக்கு கிடைத்தது. சென்னையில் தங்கியிருக்கும்போது முதலமைச்சர் காமராஜர், அறிஞர் அண்ணாத்துரை, டாக்;;டர் வரதராஜன், அ.ச.ஞானசம்பந்தன், அகிலன், கவிஞர் அள வள்ளியப்பா ஆகியோரைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் இவருக்கு கிடைத்தது.
திருகோணமலையில் பத்திரிகை நிருபராக பணியாற்றும்போது கமலா லக்ஷ்மணன், பத்மினி பிரியதர்சினி, வழுவூர் ராமையாபிள்ளை, மனோகர், ராஜசிலோசனா, சகஸரநாமம், பித்துக்குளி முருகதாஸ், கிவா.ஜகந்நாதன், குன்றக்குடி அடிகளார் போன்ற முக்கியஸ்தர்க்ளைப் பேட்டி காணும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
இந்துக்கல்லூரியில் பணியாற்றும்போது, கண்டி முஸ்லிம் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். அங்கிருந்து அட்டாளைச்சேனை ஆசிரியர் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். 1964இல் கல்வி அமைச்சு பாடசாலைகளில் எல்லா மணவர்களுக்கும் கணிதம், விஞ்ஞானம் ஆகியவை கற்பிப்பதற்காக புதிய பாடத்திட்டங்களைத் தயாரிக்;க முயன்றபோது கணித பாடத்திட்டக் குழுவில் பணியாற்ற அழைக்கப்பட்டார். பின் மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியிலும் பாடவிதான அபிவிருத்தி நிலையத்திலும் பணியாற்றினார். அப்போது கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியாவில் உள்ள மக்குவாறி பல்கலைக் கழகத்தில் சர்வதேச கணிதக் கற்கை நெறியில் கற்பதற்குச் சென்றார். இந்த கற்கை நெறியை முடித்தபின் இலங்கைக்குத் திரும்பி 1972இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீத்திருத்தச் செயல்பாடுகளில் பாடவிதான அபிவிருத்தி நிலையப் பணிகளில் ஈடுபட்டார். பாடவிதான அபிவிருத்தி நிலையத்தால் தமிழில் தயாரிக்கப்பட்ட 'செயல் மூலம் உணர்தல்' என்னும் ஆரம்ப கணித ஆசிரியர் கைந்நூல்களைத் தயாரித்த்த குழுவின் தலைவராகவும் சேவைக்காலப் பயிற்சி ஆலோசகராவும் பணியாற்றி புதிய ஆரம்ப கணிதம் தொடர்பான தமிழ் மொழி மூலமான கருத்தரங்குகளை நடத்தினார். அப்போது கொழுப்புப் பல்கலைக்கழகம் நடத்திய கல்விமாணி பட்டப்படிப்புக்கு கல்வி அமைச்சினால் தெசிவு செய்யப்பட்டு அதில் படித்து கணிதத்தை விசேட பாடமாக பயின்று முதலாம் வகுப்பில் சித்தியடைந்;தார். அந்த ஆண்டு இந்த பட்ட கற்கை நெறியில் இவருக்கு மாத்திரமே முதலாம் வகுப்பு சித்தி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்கள் மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியில் அதிபராக பணியாற்றியபின் கொழும்பு பல்கலைக் கழக கல்விப் பீடத்தில் விரிவுரையாளராக இணைக்கப் பட்டார்;. அங்கு கல்விப் பீடத்தில் பணியாற்றும்போது கொழுக்புப் பல்கலைக்கழக சிங்கள பேராசிரிர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். பாடநூல் வெளியீட்டு ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், திரைப்படக் கூட்டுத்தாபன கதைவசன மதிப்பீட்டுக் குழு உறுப்பினராகவும், பிரதேச அமைச்சின் தமிழ் நாடகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் தத்துவ முதுமாணிப் படிப்பை முடித்தாலும் நாட்டின் அசாதரண நிலைமையால் ஆய்வு அறிக்;;;கை சமர்ப்பிப்பதற்கு பல இடங்களுக்குச்; சென்று தரவு சேகரிக்க இவரால் முடியவில்லை. கொழும்பில் இவர்; கட்டிக்கொண்டிருந்த வீடும் எரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள சிக்காக்;;கோ பல்கலைக் கழகம், ஹாவாட் பல்கலைக்கழகம் என்பன இவருக்கு கலாநிதிப் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கியது. எனினும்; கொலம்பியா பல்கலைக்கழகம் கலாநிதிப்படிப்புக்கு அனுமதியோடு புலமைப் பரிசிலும் வழங்கியது. எனவே அங்கு சென்று கலை முதுமாணி, விஞ்ஞான முதுமாணி, கல்வி கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றார். கலாநிதிப் பட்டத்துக்கு கள ஆய்வுக்காக ஆபிரிக்காவில் உள்ள பொட்சுவாணாவுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். மொசாம்பிக் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கணிதக் கல்வி மாநாடு, சுவாசிலாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஆசிரியர் கல்வி மாநாடு, சிம்பாவேயில் நடைபெற்ற சர்வதேச கணனிக் கல்வி மாநாடு, இந்தியாவில் தஞ்சாவூரில் தமிழ்ப்; பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகியவற்றில் பங்குபற்றி இவரது ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளார்.
பொட்சுவாணாவில் தேசிய கணிதப் போட்டி பரீட்சகராகவும், தேசிய கல்வி ஆணைக் குழு அறிக்கைக்கு ஆராய்ச்சிக் குழு உறுப்பினராகவும், தேசிய கணித பாடத்திட்ட மீள் ஆய்வுக்குழு உறுப்பினராகவும், ஐடிஎம்மின் வெளி ஆலோசகராகவும், தொழில், ஆக்கத்திறன் நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும், தேசிய பயிற்சி அதிகாரசபையின் பயிற்சியாளராகவும். பொட்சுவாணா தமிழ் கலாச்சாரக் கழகத்தின் தலைவராசவும், செயலாளராகவும், தமிழ் பூங்கா என்னும் சஞ்சிகையின் ஆசிரியராசவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூதவை உறுப்பினராகவும், கொலம்பியா பல்கலைக்கழக மில்வங் ஞாபகார்த்த நூலகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், கல்விப் பீட விடுதி இணைப்பாளராகவும், வள அறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது கிழக்குப் பல்;கலைக்கழகம் நடத்திவரும் விஞ்ஞான முதுமாணி கற்கை நெறி, மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப நிறுவகம் நடத்திவரும்; பாடநெறிகள் ஆகியவற்றுக்கு வருகைதரு விரிவுரையாளராகவும்;. விபுலாநந்த அழகியற்கற்;;கை நிறுவகத்தின் சின்டிக்கேற் உறுப்பினராகவும் பணியாற்றிவந்திருந்தார்.
இவரின் முக்கிய ஆய்வுகள்:
Konesappillai, K (1980) A
Study of Sex Difference in Mathematics achievement among the Grade 10 boys and
girls of Sri Lanka (Thesis for B.Ed. Honours
Degree)
Konesappillai,
K.(1982) A Comparative Study of the
Achievement in Mathematics of the Grade 7
and Grade 9 Children in Sri Lanka (Minor thesis for M.Phil)
Mautle,G,
Konesappillai,K. and Lungu E.(1993) The Quality
of Primary School Completers ins its implications for From I Organization and
Teaching. ( Research report presented to
the National Commission on Education, Botswana.)
Konesappillai,K.,
Mautle, G and Shameela Essack.. (1993)
Influence of Competency in English on Mathematics Achievement of Primary School
Completers in Botswana (Paper presented at the Conference on: The Mathematics Education of Children in Southern
Africa, Beira, Mozambique. September 15 -19, 1993)
Konesappillai, K. and Shameela Essack (1995) Some Aspects of Ethnomathematics of the
Eastern Sri Lanka with Comparisons with that of Botswana. ( Paper
presented at the Wold Conference on Tamil Studies, Tamill
University, Tanjavoor, India. January 1 – 5, 1995)
Sechele,G. K. and
.Konesappillai, K. (1995) Some New Perspectives
in Management of Schools in Botswana, Paper presented at the Second
National Conference on Teacher Education,
Molepolole College of Education,
Botswana. May 2 – 5,1995.
Konesappillai, K.
(1995) Botswana Primary Teacher Training Colleges
Mathematics Syllabus - Present and Future.
Paper presented at the Conference of Southern African Mathematical Science
Association held in Mountain Inn, Swaziland. August 28 - September 1,1995.
Konesappillai,
K.(1995) Computers for mathematics teaching.
Paper presented at the International
Conference on Mathematics for Development, organized by the Southern African
Mathematical Sciences Association at the University of Zimbabwe, Harare,
Zimbabwe
December18-23, 1995.
Sechele, G.K. and
Konesappillai, K. (1996) Aims and
objectives of Primary Education - A
policy analysis - Paper presented at the Head Teachers’ Workshop,
Education Centre, Tlokweng, Botswana.May 1996.
Konesappillai, K. (1998). A study of the development
of computer education in Sri Lanka with comparison to that of India, China,
Thailand and Singapore. Dissertation
accepted for the degree of Doctor of Education.
Sechele, G.K. and Konesappillai, K. (2000). Teacher
Education in Botswana - A leap in the new millennium. Paper presented at
the 4th Biennial Conference on Teacher Education
held at Gaborone Sun, Botswana, February 8th - 10, 2000.
Sechele, G.K. and Konesappillai, K ((2001). Quality assurance in teacher education
through the SADC Excellence Model.
Paper presented at the Fifth Biennial National Conference on Teacher
Education held at Tonota College of Education 28 30 August 2001.
Konesappillai, K.
(2010) ru;tNjr
muq;fpy; eilKiwapy; ,Uf;Fk; vz;Kiw The evolution of the international number system Published in Ahavili – a monthly periodical published in Colombo.
Konesappillai (2012) cstpayhsu; n[Nuhk; Gwzupd; fUJNfhs; Muha;r;rp KbG
my;y Bruner’s hypothesis is not a research finding. Published in Ahavili – a monthly periodical
published in Colombo
Konesappillai, K.
(2012) nrd;w
E}w;whz;L filrp gFjpapYk; ,e;j E}w;whz;L Kw;gFjpapYk; ,yq;ifapy; ntspte;j rpy
jkpo; ntspaPLfspy; tOf;fSk; mit njhlu;ghd rupahd jfty;fSk; Mistakes in the Tamil
publication of the later part of the last century and the beginning of this
century. Published in Ahavili – a monthly periodical published in Colombo.
Konesappillai, K.
(2012) cyf
Mrpupau; jpdk; World Teachers’ Day Published in
Ahavili November 2012– a monthly periodical published in Colombo.
Konesappillai, K.
(2012); tpQ;Qhdj;Jf;Fk; fzpjj;Jf;Fk
tpNrl ghlrhiyfs; Special schools for science and mathematics. Published in Ahavili December
2012 - a monthly periodical published in Colombo
Konesappillai, K.
(2013) rFe;jyhNjtp
– xU kdpj fzdp Sahunthala Devi - a human computer Published in Ahavili November 2013 - a monthly periodical published in Colombo.
Konesappillai, K.
(2013) MWKfk; vd;Dk; mjpra fzpjr;
rhjidahsu; Published in the 94th
Anniversary Magazine of Paddiruppu Central College, National School Kaluwanchkudi.
Konesappillai, K. (2013) Ie;jhk; ju Mrpupau; topfhl;bapy; my;Ngl; Id;];iuidg; (Albert Einstein) gw;wpa jtwhd jfty.; Published in
Ahavili December 2013
- a monthly periodical published in Colombo.
Konesappillai, K. (2014) fy;tpg; gzpapy; 125 Mz;Lfisg;
G+u;j;jpahf;fpatpoh nfhz;lhLk; ‘uprp’
(TC) vd;Dk; ;;;;;;;;;;;;;;;;(Teachers College ColumbiaUniversity) nfhyk;gpah gy;fiyf;fofj;jpd;
fy;tpg; gPlk; Published in Ahavili January 2014
- a monthly periodical published in Colombo.
Konesappillai, K. (2014) vl;lhk; ju tFg;G “jkpo; nkhopAk; ,yf;fpaKk;”;;;
vd;Dk; ghl E}ypy; ,lk;ngw;Ws;s my;Ngl; Id;];iuidg;gw;wpa jtwhdJk;
mtkjpg;ghdJkhd fUj;Jf;fs;. Published in Ahavili February 2014 - a monthly periodical published in Colombo
Research Articles to be published:
neQ;rk;
kwg;gjpy;iy vd;gJ cz;ikah?
PULAVARMANI
PERIATHAMBIPPILLAI AUR AIVU A PRINT VERSION OF A THESIS
ACCEPTED
BY JAFFNA UNIVERSITY FOR THE AWARD OF M.PHIL
aho;g;ghzg; gy;fiyf; fofj;jhy;
Vw;Wf;nfhs;sg;gl;l Ma;Ntl;bd; mr;Rg; gpujpahd Gytu;kzp V.ngupajk;gpg;gps;is– Xu; Ma;T vd;Dk; E}ypd; Ma;T.
A critical study highlighting the errors and
plagiarism of the print version of the thesis accepted by the Jaffna University
for the award of the degree of Master of Philosophy,
MATTAKALAPU
VALVIYAL THADANGALIL ASIRIYASIOMANI THAMBIPILLAI SELVANAYAGAM
kl;lf;fsg;G tho;tpay; jlq;fspy;; MrpuparpNuhkzp
jk;gpg;gps;is nry;tehafk;
A crital study highlighting the mistakes in this book which
was sponsored by the Education Department of Eastern University
mfpy cyfpYk; cau; me;j];ijg; ngw;Ws;s Nehngy; gupRk; mjd;
tuyhWk; nry;thf;Fk;
PUBLICATIONS
(edited)
nray; %yk; czu;jy; 1> 2> 3. fy;tp mikr;R
ntspaPL
fzpjk; ehd;fhk; tFg;G. fy;tp ntspaPl;L jpizf;fsk;.
fzpjk; juk; 1> 2>3>4>5. fy;tp mikr;R
ntspaPL. (MNyhrfUk; nkhopngau;g;ghsUk;)
PUBLICATIONS UNDER PREPARATION:
fzpj tpUj;jpapy; ,e;Jf;fspd; (,e;jpahtpd;)
gq;fspg;G
cyfg; Gfo; ngw;w cstpayhsu;fs;
fzpjNkij rpwpdpthr uhkhD[k;