நாடாளுமன்றத்தில் கொள்கை பிரகடனம் குறித்த தமது உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சம்பிரதாயப்பூர்வமான மரியாதை அணிவகுப்புகளுடன் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
அவருக்கு முன்னதாக சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகைத்திந்திருந்தனர்.
ஜனாதிபதியை, சபாநாயகர் கரு ஜெயசூரிய வரவேற்ற போது, 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
பின்னர் தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட்ட ஜனாதிபதி, தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதை வலியுறுத்தினார்.
அத்துடன் நாட்டில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
அதேநேரம் அரசாங்கத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த 3 ஆண்டுகளில் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை அடைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாகுபாடின்றி செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
2015ம் ஆண்டு தமது அரசாங்கம் பதவி ஏற்கும் போது, தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் செயற்பாடுகள் 7 ஆண்டுகள் தாமதித்திருந்தன.
கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொண்டது.
ஆனாலும் முழுமையாக அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
இந்தநிலையில் அரசியல் தீர்வை முன்வைத்து வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவருக்கும் தாம் அழைப்பு விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மலையக மக்களின்பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் படைத்தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த காணிகளில் 85சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்க கொள்கை பிரகனடத்தை வெளியிட்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையில் 40 ஆயிரத்து 475 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.