புதிய பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா உத்தியோகபூர்வமாக கடமைகள் பொறுப்பேற்பு


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன், நகாத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்கி ஜயவர்த்தன , எம்.ஐ.எம். மன்சுர், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.