
(இ.சுதாகரன்)
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு 14ம் திகதி திங்கட்கிழமைகாலை 9.01 மணிக்குபாடசாலையின் பதில் அதிபர் இ.தவறாஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜ.பிரியதர்ஷன் மற்றும் சிறப்பு அதிதிகளாக பாடசாலைமேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் திருமதி வ.சுரேஸ், கிராமசேவை உத்தியோகத்தர் வி.துஸ்யந்தன், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எஸ்.ரூபேந்திரன்
மற்றும் கௌரவவிருந்தினர்களாக பெரியகல்லாறு சர்வாத்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயவண்ணக்கர்.எம்.மன்மதராஜா, ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத் தலைவர் எஸ்.பேரின்பராசா மற்றும் மாணவர்களின் பெற்றோர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது பாடசாலைப் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் தரம் ஐந்துபுலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.தசாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் கோட்டமட்டம் வலயமட்டம் இமாவட்ட, மாகாண, தேசிய ரீதியாக சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்
பிரதம அதிதி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெ.பிரியதர்ஷன் மற்றும் பெரியகல்லாறு மத்தியகல்லூரியின் அதிபர் சி.பேரின்பராசாஆகியோர் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.















