வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச வர்த்தக சங்கத்தினரின் வேண்டுகோளின் பிரகாரம் வர்த்தக நிலையங்கள் மே தினத்திற்காக அடைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகள் இயங்கவில்லை எனவும், தனியார் போக்குவரத்து பஸ் சேவை மாத்திரம் இயங்கி வருவதாகவும் இதனால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் இன்று சித்தாண்டி மாவடிவேம்பில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அங்கு இடம்பெறும் மே தினத்திற்காக மக்களை ஏற்றும் முகமாக பேருந்துகள் சென்றுள்ளமையால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
















