நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த போது அவர் மின்னல் தக்கத்திற்கு உள்ளானார். சம்பவத்தில் 59 வயதானவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியில் நேற்று பிற்பகல் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானார்.
25 வயதான பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை கடும் இடியுடன் கூடிய மழைபெய்த வேளையில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.













