
(படுவான் எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான நடமாடும் சேவை (20) வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஆரம்ப உரையுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது தேசிய ஒருமைப்பாடுகள் நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் இருபதுக்கு மேற்பட்ட திணைக்களங்கள் இவ்நடமாடும்; சேவையில் ஈடுபட்டிருந்தனர் (800)மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டும் விஷேடமாக ஜந்து குடும்பங்களுக்கு புதிதாக காலம்கடந்த திருமணம் நடைபெற்று பதிவுகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது தேசிய ஒருமைப்பாடுகள் நல்லிணக்கம் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன்; பிரதி அமைச்சர் அலிஸாஹி மௌலானா அமைச்சின் செயலாளர்கள் மொழிக்கல்வி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கே.கோபிநாத் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்
பிரதேச சபை தவிசாளர் கே.ரஜனி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.








































