மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடத்தும் விளையாட்டு விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடத்தும் கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழக மைதானத்தில் வெள்ளிக் கிழமை(11) பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவிருக்கின்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சு.ஸ்ரீகாந், மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், சுகாதார வைத்திய அதிகாரி DR . K.ரமேஸ், மண்முனைப் பிரதேச சபை செயலாளர் N.கிருஷ்ணபிள்ளை, ஆரையம்பதி தபால் அதிபர் லோ.யோகேஸ்வரி
கௌரவ அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.Y. ஆதம் லெப்பை ஆகியோர் கந்துகொள்ளவுள்ளனர்.
பலதரப்பட்ட கண்கவர் கலாசார விளையாட்டுக்கள் அன்றைய தினம் இடம்பெற இருக்கின்றது. அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.













