ஏறாவூரில் கட்டட நிர்மாணங்களின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும் நெகிழ்வுத் தன்மையுடனும் அணுகுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ.அப்துல் வாஸித் தெரிவித்துள்ளார்.
கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றின் சார்பாக நகரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விஷேட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், வாவிக்கரையின் ஒரு புறத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுதல், இருளடைந்ந வீதிகளுக்கு தெரு மின்விளக்குகளைப் பொருத்துதல், குறுக்கு வீதிகளின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தல், நெடுஞ்சாலை விஸ்தரிப்பு, நகர அபிவிருத்தியும் அழகுபடுத்தலும், நோய்கள் பற்றிய அவதானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் இந்த விஷேட சபை அமர்வில் கலந்தாலோசிக்கப்பட்டன.













