எங்கள் வீட்டுத் தொழிலாளர்களை சிறைக்குள் முடக்கிவிட்டு மட்டு மண்ணில் மே தினமா..? சுதந்திரக்கட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!


எங்கள் வீட்டுத் தொழிலாளர்களை சிறைக்குள் முடக்கிவிட்டு, சுதந்திரகட்சியினர் எங்கள் வீட்டு முற்றத்தில் தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதை கண்டித்து அமைதிவழியில் போராட்டம் நடத்தவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இன்று (4) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மே தின நிகழ்வுகள் எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அமைதி போராட்டத்தில் கட்சி பேதம் மற்றும் அரசியல் நலன்களுக்கு அப்பால் தமிழர் என்ற அடையாளத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.